அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில் முகத்தை மூடிக்கொண்டு காரில் சென்றது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அதனை விமர்சித்து வருகிறார்கள். அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி முகத்தை மூடியதை வீடியோ எடுத்து தற்போது திமுகவினர் தவறான செய்திகளை பரப்புவதாக விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில் திமுக ஐடி விங் தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு முகத்தை மூடி எது தொடர்பாக சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது. இது தொடர்பாக எக்ஸ் பதிவில்,

பழனிசாமியின் கள்ளக் கார் பயணங்களும், கேள்விகளும்!?

1. வெள்ளை அரசு வாகனத்தில் சென்றதாக சொல்லும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, வரும் போது எப்படி ரூ.8 கோடி மதிப்புள்ள DL2CAN 9009 பதிவெண் கொண்ட கருப்பு Bentley தனியார் சொகுசு காரில் வந்தார்?

2. டெல்லிக்கு செல்லும் போதெல்லாம் பல கார்களில் மாறி மாறி மறைந்திருந்தே போகும் மர்மம் என்ன?

3. கட்சி தொடர்பான சந்திப்பு என்றால் கட்சியினர் உடனிருக்க வேண்டும், அரசு அலுவல் என்றால் அதிகாரிகள் உடனிருக்க வேண்டும், தனிப்பட்ட குடும்ப நிகழ்வென்றால் குடும்பத்தினர் இருக்கலாம்! ஆனால் திரு அமித்ஷா இல்லத்தில் இருந்து வெளியே வந்த காரில் பழனிசாமி உடன் இருந்தது யார்?

4. பழனிசாமியுடன் இருப்பவர் யார்? அவர் ஏன் தன் முகத்தை மறைக்க வேண்டும்?

5. அமைச்சருக்கு நிகரான கண்ணியமிக்க தமிழ்நாடு எதிர்க்கட்சித்தலைவர் பொறுப்பில் இருக்கும் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது முகத்தை மறைத்துக் கொண்டு அமித்ஷா அவர்களின் இல்லத்திலிருந்து வெளியேறுவது ஏன்? என்ன அவசியம்? என்ன நிர்பந்தம்? எதை மறைக்கிறார்? யாரை மறைக்கிறார்? (வீடியோ இணைப்பில் 👇)

மேலும் செய்தியாளர் சந்திப்பில் தடுமாறும் பழனிச்சாமியிடம் இந்த கேள்விகளுக்கு பதிலுண்டா? என்று பதிவிட்டுள்ளனர்.