தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அமைச்சரான விக்னேஷ் அவர்கள், இன்று திண்டுக்கல் பேருந்து நிலையம் மற்றும் அங்குள்ள அரசு தலைமை மருத்துவமனை ஆகியவற்றில் அதிரடியாக நுழைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், “நீங்கள் ஏற்கனவே இந்த இடங்களுக்கு ஆய்வுக்கு வரப்போவதாக முன்னதாகவே அறிவித்துவிட்டு, அதன் பிறகுதான் ஆய்வுக்கு வருகிறீர்களா?” என்று சற்று காரசாரமான கேள்வி ஒன்றை எழுப்பினார். இதற்கு சற்றும் யோசிக்காமல் பதிலளித்த அமைச்சர் விக்னேஷ், “நான் இங்கு ஆய்வுக்கு வரப்போவதை அரை மணி நேரத்திற்கு முன்புதான் நானே முடிவு செய்தேன். மக்கள் அதிகமாகப் புழங்கும் இடம் என்பதால் தான் பேருந்து நிலையத்தையும், அரசு மருத்துவமனையையும் தேர்ந்தெடுத்தேன்” என்று விளக்கமளித்தார்.
டேய் மீடியா சனியனே அவர் தான் போலாம்னு சொல்றாருல கூட்டு போக வேண்டியது தான..!🤧
இந்த மாறி கேள்வி எல்லாம் திராவிடிய ஆட்சில இந்த மீடியா கேட்டு இருக்குமா..!😤
எச்சகல மீடியா..!💦 pic.twitter.com/fL2f48DSu3
— ♛🆁.JAY ˚˖𓍢ִ໋🦢˚ (@spjraja) June 8, 2026
உடனே அந்தச் செய்தியாளர், “எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாமல் சர்ப்ரைஸாக ஆய்வு செய்யலாம் அல்லவா?” என்று மீண்டும் கேட்க, “ஓகே, நீங்களே இப்போது ஒரு இடத்தை சொல்லுங்கள்… உடனே இப்போதே அங்கு சென்று ஆய்வு செய்யலாம்” என்று அமைச்சர் ஸ்பாட்டிலேயே சவால் விடும் தொனியில் தயார் நிலையில் பதிலளித்தார். செய்தியாளரின் கேள்விக்கு அமைச்சர் விக்னேஷ் ஆன் தி ஸ்பாட்டில் ‘லைவ் சேலஞ்ச்’ விடுத்த இந்தச் சுவாரசியமான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது.
