சமூக வலைதளங்களில் ஒரு நகைச்சுவை வீடியோ இப்போது மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது. இதில், ஒரு மருமகள் மொத்த குடும்பத்தையும் ஒரே நேரத்தில் ‘எமலோகத்துக்கு’ அனுப்பும் வகையில் செய்த செயல், பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.
எக்ஸ் தளத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோ, மக்களை சிரிப்பதோடு, ஒருவருக்கொருவர் பகிர்ந்து ரசிக்கவும் தூண்டியுள்ளது. மாமியார்-மருமகள் கதைகள் எப்போதும் இணையத்தில் வைரலாகும் நிலையில், இந்த வீடியோ ‘எமராஜனின் வேலையை எளிதாக்கிவிட்டாள் இந்த பெண்’ என்று நெட்டிசன்கள் கலகலப்பாக பேசி வருகின்றனர்.
यमराज का काम आसान करते हुए पापा की परी 😀 pic.twitter.com/OpAu1optkE
— Jason Bourne (@jasonbourne0101) September 16, 2025
வீடியோவின் தொடக்கத்தில், கிராமப்புற வயல்வெளியில் சிலர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது ஒரு பெண் ட்ரேயில் டீயுடன் வந்து அனைவருக்கும் கோப்பைகளை வழங்குகிறார். அருகில் ஒருவர் வயலில் யூரியா தூவிக்கொண்டிருக்க, அவரை அழைத்து டீ குடிக்கச் சொல்கிறார் அந்த பெண்.
எல்லோரும் டீயை ருசித்து குடிக்கும்போது, மாமியார் கேட்கிறார், “பெண்ணே, இதுல சர்க்கரை போட்டியா?” அதற்கு மருமகள், “ஆமாம், அம்மா, இரண்டு கைப்பிடி நிறைய சர்க்கரை போட்டேன்” என்று சொல்ல, இதுதான் சிரிப்பு புயலின் ஆரம்பம். மாமியார் யூரியா பையை காண்பித்து, “இதுலருந்து எடுத்தியா?” என்று கேட்க, மருமகள் அப்பாவித்தனமாக, “ஆமாம், அங்க வெள்ளையா இருந்த பொடியை எடுத்து டீயில் போட்டேன்” என்று பதிலளிக்கிறார்.
உண்மையில், அவர் சர்க்கரைக்கு பதில் யூரியாவை டீயில் கலந்துவிட்டார் என்பது தெரியவந்ததும், எல்லோரும் டீ கோப்பைகளை கீழே வைத்துவிட்டு அதிர்ச்சியில் உறைகின்றனர். சிலர் சிரிப்பை அடக்க முடியாமல் சிரிக்க, சிலர் பயத்தில் மௌனமாகின்றனர். இந்த கலகலப்பான தருணம் இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்து, ‘நகைச்சுவையின்’ உச்சமாக பேசப்படுகிறது.
