வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு அதிமுக, திமுக போன்ற கட்சித் தலைவர்களும், கூட்டணி கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஒவ்வொரு கட்சியும் மாற்றுக் கட்சியினரை இணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தீமலையில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில் திமுக முன்னாள் சேர்மன் காசி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர். திமுகவின் மூத்த அமைச்சரான எ.வ வேலுவின் கோட்டையாக தீமலை திகழ்வது குறிப்பிடத்தக்கது.
