அசாமில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், “அசாமில் பாஜக ஆட்சி இல்லையென்றால் என்ன நடந்திருக்கும்?” என்ற தலைப்பில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.இந்த வீடியோவை அசாம் மாநில பாஜக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ்பக்கம் மூலம் வெளியிட்டுள்ளது. அதில், பாஜக ஆட்சி இல்லாதிருந்தால்: மாட்டுக்கறி உணவு சட்டபூர்வமாக மாறும். பாகிஸ்தானுடன் நெருக்கம் கொண்ட காங்கிரஸ் ஆட்சி ஏற்படும். அசாமில் டீ-எஸ்டேட் முழுவதும் முஸ்லிம்கள் நிறைந்து விடுவார்கள்.

கவுகாத்தி விமான நிலையம், கிரிக்கெட் மைதானம் உள்ளிட்ட இடங்கள் முஸ்லிம் மக்களால் நிரம்பிவிடும். சட்டவிரோத முஸ்லிம் குடியேறிகள் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பார்கள் மாநில மக்கள் தொகையில் 90% இஸ்லாமியர்கள் ஆவார்கள் என கூறப்பட்டு, முஸ்லிம் சமூகத்தின்மீது நேரடியாக வெறுப்பு பரப்பும் வகையிலும், மத அடிப்படையில் பயம் கூட்டும் முயற்சியாகவும் இந்தக் காணொளி வெளியாகியுள்ளது.

 

மேலும் இதற்கு மாநிலத்தின் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் குடிமை அமைப்புகள் கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளன. “இந்த விமர்சனங்களை பாஜக கண்டிக்கவில்லை. அதற்கு பதில் அசாம் மாநில பாஜக அரசில் இருக்கும் ஒரு அமைச்சர் இந்த வீடியோவை மீண்டும் பகிர்ந்ததும் பரபரப்பை இன்னும் அதிகரிக்கச் செய்துள்ளது