சமூக வலைதளத்தில் தினமும் ஏராளமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது இணையதளத்தில் வைரலாகும் வீடியோ நெட்டிசன்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த வீடியோவில் நாய் ஒன்று குப்பைத் தொட்டியின் மேல் ஏறி நின்று உணவை தேடிக் கொண்டிருந்தது. அப்போது பின்னால் இருந்து வந்த வாலிபர் நாயை, குப்பை தொட்டிக்குள் தள்ளி விட்டு அதன் மூடியை மூட நினைத்தார்.

 

ஆனால் அதிலிருந்து தப்பிய நாய் கீழே இறங்கி அந்த இளைஞரை துரத்த தொடங்கியது. அதேபோன்று அருகில் இருந்த நாய்களும் குலைத்துக் கொண்டே அந்த இளைஞரை துரத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.