2025 ஆசியா கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்று, மீண்டும் ஒரு முறை இந்திய கிரிக்கெட்டின் பெருமையை உலகுக்கு காட்டியுள்ளது. வெற்றியின் ஆரவாரத்துக்கு நடுவே, கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாமல் லக்ஸரி வாட்ச் ரசிகர்களிடையே அதிகம் பேசப்பட்ட விஷயமாக, ஹர்திக் பாண்ட்யா அணிந்திருந்த ஒரு வாட்ச் உருவெடுத்துள்ளது. Richard Mille நிறுவனத்திலிருந்து வெளியான RM 27-04 மாடல் வாட்ச் தான் அது. இதன் மதிப்பு சுமார் ரூ.20 கோடி என கூறப்படுகிறது.
சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இந்த வாட்ச் வெறும் 30 கிராம் எடை மட்டுமே கொண்டதுடன், 12,000 G-force வரை எதிர்ப்பு சக்தி கொண்டது என்பதால், மிக கடுமையான விளையாட்டு சூழலிலும் இது பாவனைக்கு உகந்ததாக விளங்குகிறது. அதிக வேக சுழற்சி, அதிர்வுகள் என எந்தவிதமான அழுத்தமும் இந்த வாட்சை பாதிக்காது என்பது இதன் தனிச்சிறப்பு. விளையாட்டு வீரர்களுக்கான extreme durability கொண்ட சாதனமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த வாட்ச் உலகம் முழுவதும் வெறும் 50 பீஸ்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு, மிக வரலாற்றுச் சிறப்புமிக்க luxury collection ஆகும். ரிச்சர்டு மில் நிறுவனம் இதற்கு முன்னர் டென்னிஸ் நாயகன் ரஃபேல் நடாலுக்காக இதே மாதிரி ஒரு வாட்சை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது ஹர்திக் பாண்ட்யா அதை அணிந்து விளையாடி, தன் ஸ்டைல் மற்றும் பெர்ஃபார்மன்ஸ் ஆகிய இரண்டையும் ஒருசேர வெளிப்படுத்தி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார்.
இந்த வாட்சின் விலை, வலிமை மற்றும் அதிலுள்ள தொழில்நுட்பம் என அனைத்தும் ரசிகர்களை மட்டுமல்லாமல், லக்ஸரி உலகத்தையும் ஈர்த்துள்ளது. போட்டியின் பரிசுத் தொகையான ரூ.2.6 கோடியை விட பல மடங்கு விலை கொண்ட இந்த வாட்ச், கிரிக்கெட் மேடையில் ஸ்டைல் மற்றும் பிரீமியம் லைஃஸ்டைலை எடுத்துக்காட்டும் வகையில் பேசப்படுவதற்கான காரணமாக மாறியுள்ளது.
