உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூர் நகரில், வேலைக்கு வெளியே செல்ல வேண்டும் என்ற காரணத்துக்காக சித்திக்கும், அவரது அக்காவின் மகளுக்கு இடையே கடும் சாலை மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தின் போது சித்தி, தனது மகள் வயதான இளம்பெண்ணின் கையைப் பிடித்துக் கடித்து, தலைமுடியை இழுத்து கீழே தள்ளிய வீடியோ சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவி வருகிறது. அந்த வீடியோவை அந்த வழியாக சென்ற ஒருவர் பதிவு செய்துள்ளார்.
उधमसिंह नगर से मारपीट का चौंकाने वाला वीडियो सामने आया है। सोशल मीडिया पर वायरल इस वीडियो में एक महिला युवती को थप्पड़ मारती दिख रही है, जबकि युवती बाल पकड़कर अपना बचाव करती नजर आती है। झगड़े के दौरान महिला ने युवती के हाथ पर दांत से काट भी लिया।युवती ने पुलिस को तहरीर देकर आरोप… pic.twitter.com/kgaLAgTK5v
— INH 24X7 (@inhnewsindia) September 15, 2025
பாதிக்கப்பட்ட இளம்பெண், தற்போது இரண்டு தங்கைகளின் பொறுப்புடன் வாழ்கிறார். சிறுவயதிலிருந்தே சித்தி அவரை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தி வந்ததாகவும், தற்போது வாழ்க்கைச்சுமைகளை தாங்க வேலைக்கு செல்ல முயற்சி செய்த போது, சித்தி அதற்கு கடுமையாக எதிர்த்ததாகவும், போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த தகராறின் போது ஏற்பட்ட மனவேதனையை பகிர்ந்த இளம்பெண், தன்னை தாக்கிய தனது சித்தியின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக ராம்புரா போலீஸ் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் தன்னிச்சையாக வேலைக்கு செல்ல முயற்சித்ததற்காக குடும்ப உறுப்பினரிடமிருந்து இவ்வாறான தாக்குதலுக்கு உள்ளானது சமூகத்தில் கடும் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாக பரவியுள்ள நிலையில், அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
