ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பி.லட்சுமி என்ற மூதாட்டி ஒடிசாவில் வாழ்ந்து வரும் தன் மகள் வீட்டில் வசித்து வந்தார். அதாவது கஞ்சம் மாவட்டத்தில் உள்ள போலசரா பகுதியில் அந்த மூதாட்டி வசித்து வந்தார். இந்நிலையில் மூதாட்டி திடீரென கண்களை திறக்கவில்லை, மூச்சு விடும் அறிகுறியும் இல்லை. இதன் காரணமாக மூதாட்டி இறந்து விட்டதாக கருதி குடும்பத்தினர் இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை செய்தனர். அதுமட்டுமின்றி மூதாட்டியை மயானத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில் மயானத்தில் இருந்த பாதுகாவலர்கள் மூதாட்டியின் உடலை பார்த்தபோது அவருக்கு மூச்சு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதனைத்தொடர்ந்து மயான பாதுகாவலர்கள் உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து மூதாட்டியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது கவலைக்கிடமான நிலையில் இருக்கும் மூதாட்டிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இறந்து விட்டதாக நினைத்த மூதாட்டி திடீரென உயிர்பெற்ற சம்பவம் அப்பகுதியில் இருப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
