தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், திருச்சிக்கு பிரச்சாரப் பயணம் மேற்கொண்டபோது, அவரைக் காண ஏராளமான தொண்டர்கள் கூடினர். இதனால் அங்கு பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலுக்கிடையே, ஒரு ஆம்புலன்ஸ் வந்தது. தவெக தொண்டர்கள் உடனடியாக வழி விட்டு, ஆம்புலன்ஸை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தைப் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதைப் பற்றி அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் ஒரு காணொளியில் கருத்து தெரிவித்துள்ளார்.
சவுக்கு சங்கர் அந்த காணொளியில் கூறுகையில், அதிமுக கூட்டங்களில் ஆம்புலன்ஸ் வந்தால் கொஞ்சம் வழி கிடைக்கும், ஆனால் இங்கு அது கூட சாத்தியமில்லை. இந்தக் கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வருவதன் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்றலாம் என்று வருவது திமுகவின் மனநிலையைப் புரிந்துகொள்ள உதவுகிறது என்றும் அவர் சாடினார். மேலும், விஜய் பேசும்போது சரியாகக் கேட்கவில்லை, ஒரு பக்கம் ஆம்புலன்ஸ் விடுகிறார்கள், இன்னொரு பக்கம் கரண்ட் கட் செய்கிறார்கள் என்று தொண்டர்களும் தங்கள் அதிர்ச்சியைப் பகிர்ந்தனர். இது ஆளும் கட்சியின் செயல் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
