ஆந்திரப் பிரதேசத்தில் பெண்களுக்கு இலவசமாக பேருந்து பயண வசதி அளிக்கப்படும் நிலையில், விஜயவாடா நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு அரசு பேருந்தில், பெண் பயணிகள் இடையே கடுமையான மோதல் நடந்துள்ளது. விஜயவாடா நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்தில் ஏற்பட்ட இந்த சம்பவம், மற்றொரு பயணியின் கையில் உள்ள மொபைல் கேமராவில் பதிவு செய்யப்பட்டது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

முதலில், ஒரு பச்சை நிற உடை அணிந்த பெண் மற்றும் மூத்த பெண் பயணிக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால் அந்த விவாதம் விரைவில் கடுமையான மோதலாக மாறியது. பச்சை உடை அணிந்த பெண், தன்னுடன் வந்திருந்த மற்ற பெண்களுடன் சேர்ந்து மூத்த பெண்ணை தாக்க முயற்சிக்க, அந்த மூத்த பெண் அவர்களிடம் கடுமையாக பதிலடி கொடுத்து, ஒருவரை பாட்டிலால் தாக்கினார். பின்னர், ஒரு ஆண் பயணியும், மூத்த பெண்ணுக்கு ஆதரவாக வந்து, மற்ற பெண்களில் ஒருவரை தாக்கியதும் வீடியோவில் தெளிவாக தெரிகிறது.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் தீவிரமான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இலவச பேருந்து திட்டத்தின் கீழ், பெண்கள் பல வகை அரசு பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்பதே அரசு நோக்கம். ஆனால், இத்தகைய தகராறுகள், பயண பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு பற்றிய கேள்விகளை எழுப்பி விட்டன.