திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையம் செங்கமேடு பகுதியில் வசித்து வந்தவர் தான் பிரதீப் என்ற பிரவீன். இவர் தனக்கு உறவினர் என்று யாருமில்லை என்று கூறி கணவரை இழந்து ஒரு மகனுடன் வசித்து வந்த இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், அப்பெண் கர்ப்பமாகியுள்ளார். இந்த சமயத்தில் பிரவீனுக்கு அம்மா இருப்பதை அறிந்த அப்பெண் அவரை பார்க்க சென்றுள்ளார். இதற்கிடையில் பிரவீனின் தாய் அப்பெண்ணை தன் மருமகளாக ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனைத் தொடர்ந்து அப்பெண் தனக்கு நடந்த சம்பவம் குறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பெண்ணை நம்பவைத்து ஏமாற்றிய பிரவீனை அதிரடியாக கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.