இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி பார்ப்பவர்களை சிரிக்க வைத்து, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், ஒரு நபரை காவல்துறையினர் துரத்தி வருகின்றனர். அந்த நபர் ஒரு கட்டிடத்தின் கதவை வெளிப்புறமாகத் திறந்து உள்ளே நுழைந்து விடுகிறார். அவர் உள்ளே செல்லும்போது கதவு மூடப்படுகிறது. இந்தக் காட்சி, ஒரு பரபரப்பான துரத்தல் காட்சியாகத் தொடங்கினாலும், அடுத்து நடக்கும் நிகழ்வு பார்ப்பவர்களை சிரிக்க வைக்கிறது.
காவல்துறையினர் கதவை அடையும்போது, அவர்கள் கதவை வெளிப்புறமாகத் திறக்காமல், உள்புறமாகத் தள்ள முயற்சிக்கின்றனர். தொடர்ந்து, எவ்வளவு முயற்சித்தும் கதவு திறக்கப்படாததால், அவர்கள் சிறிதும் யோசிக்காமல் உள்புறமாகவே தள்ளிக் கொண்டிருக்கின்றனர். இறுதியில், கதவு திறக்கப்படாததால் காவலர்கள் அந்த இடத்தை விட்டு வெறுப்புடன் செல்கின்றனர். இந்த முட்டாள்தனமான செயல், சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, பலரையும் சிரிக்க வைத்துள்ளது.
