சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் காணொளியில், ஒரு நபர் கையில் தண்ணீர் பாட்டிலுடன் பால்கனிக்கு வருகிறார். பின்னர், அவர் அங்கு வைக்கப்பட்டிருந்த துணிகளைப் பார்த்தவாறு தடுப்புச் சுவருக்கு அருகே செல்கிறார். அப்போது அவர் தடுமாறி எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து கீழே விழுந்துவிடுகிறார், இது பார்ப்போரை பதற வைக்கும் காட்சியாக உள்ளது.
இந்தக் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் பால்கனிகளில் பாதுகாப்பு முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது.
