த.வெ.க. தலைவர் விஜய் தனது முதல் அரசியல் பிரசாரத்தை நேற்று திருச்சியில் தொடங்கினார். விஜயின் வருகையால் திருச்சி முழுவதும் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் உற்சாகக் கூட்டம் எழுந்தது.
கட்டுக்கடங்காத மக்கள்தொகை காரணமாக, விஜயால் பிரசார மேடைக்கு நேரத்துக்கு செல்ல முடியாத சூழல் உருவானது. இதன் பின்னர், அரியலூரில் பிரசாரத்தை தொடர்ந்து மேற்கொண்ட விஜயின் அரசியல் பயணத்தை, தமிழக செய்தி சேனல்கள் மட்டுமின்றி தேசிய பத்திரிகைகளும் நேரடியாகக் கவனித்து செய்திகளை சேகரித்தன.
ஆனால், அரியலூரில் பிரசாரம் நடைபெற்றபோது, பிரபல ஆங்கில பத்திரிகை செய்தியாளர் ஒருவர் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த நிலையில், த.வெ.க. தொண்டர் ஒருவர் அவரை தொந்தரவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
TVKians heckling in national media disrupting media coverage from a senior journalist in @ndtv without an ounce of discipline.
அரசியல் படுத்தப்படுத்தப்படாத ரசிகர்களின் அவல நிலை. pic.twitter.com/MmijV8GZDu
— Red Dragon™🐉🔥 (@ajithianforevr) September 14, 2025
“>
அந்த தொண்டர், நடனமாடியபடியே செய்தியாளரின் கழுத்தில் த.வெ.க. கட்சிக் கொடியை போட்டு, செய்தி சேகரிப்பதை தடுக்க முயன்றார். இதற்கிடையில், செய்தியாளர் தடைகளை மீறியும் தனது பணியை தொடர்ந்து செய்தி சேகரித்தார். சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி, அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.
