சமூக ஊடகங்களில் அன்றாடம் பெரும் அளவில் பன்முக வீடியோக்கள் பரவி வருகின்றன. அதில், காட்டுயிர்கள் தொடர்பான காணொளிகள் எப்போதும் பார்வையாளர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன. சில சமயம் வேட்டைக்காரன்–இறைச்சி எனப்படும் உயிர்களின் மரணபோர்களாக இருந்தாலும், சில சமயங்களில் அதிர்ச்சியூட்டும் அமைதியான தருணங்களும் பதிவாகின்றன.
அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் அதிர்ச்சி, ஆச்சரியம் மற்றும் வியப்பை தூண்டும் ஒரு வீடியோ வைரலாகியுள்ளது. இதில், கேபிபரா (Capybara) எனப்படும் சிறிய விலங்கு, முதலைகளால் நிரம்பிய குளத்தில் தைரியமாக நுழைந்து, மகிழ்ச்சியுடன் நீந்துவது பதிவு செய்யப்பட்டுள்ளது.
Capybaras have mastered the art of “Chill guy” pic.twitter.com/t51Bs8kryY
— Wildlife Uncensored (@TheeDarkCircle) September 11, 2025
அந்த வீடியோவில், ஆற்றின் கரையில் பல முதலைகள் அமைதியாக படுத்திருக்கின்றன. அப்போது, திடீரென ஒரு கேபிபரா, எந்த அச்சமும் இல்லாதவாறு அவற்றின் நடுவே செல்லும் காட்சியைக் காணலாம். அது தண்ணீருக்குள் நுழைந்து மகிழ்ச்சியாக நீந்துகிறது.
பூமியில் வாழும் மிகப்பெரிய கொறித்துண்ணியாக கருதப்படும் இந்த விலங்கு, விலங்குகளிடையே காணப்படும் அச்சமின்றி வாழும் தன்மை மற்றும் சமநிலையைக் எடுத்துக்காட்டுகிறது என பலரும் பாராட்டுகின்றனர்.
இந்த 23 வினாடிகள் கொண்ட காணொளி, சமூக வலைதளமான ‘X’ இல், @TheeDarkCircle என்ற கணக்கால் பகிரப்பட்டுள்ளது. இதில், முதலைகளின் நடுவில் கேபிபரா தைரியமாக நடமாடும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இதுவரை 50,000-க்கும் மேற்பட்ட முறை பார்வையிடப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் இதனை விரும்பி, தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துள்ளனர்.
