திருச்சியில் நடந்த தவெக பொதுக்கூட்டத்திற்கு ஆம்புலன்ஸ் நுழைந்த சம்பவத்துக்கு பிறகு, அரியலூரில் நடிகர் விஜய் பரப்புரை நிகழ்ச்சி நடந்தபோது திடீரென மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால் பரப்புரை பகுதியில் இருட்டு நிலவ, மக்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டது.

மின்தடை ஏற்பட்டபோதிலும், இருட்டிலேயே விஜய் தனது ஆதரவாளர்களை சந்தித்து பேசினார். இந்த சம்பவம் தவெகவினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், “திமுக அரசு திட்டமிட்டு தேர்தல் பரப்புரை நிகழ்ச்சிகளில் தடைகள் ஏற்படுத்துகிறது” என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தொடர் நிகழ்வுகள் தொடர்பாக தவெக நிர்வாகிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.