மியான்மரில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சி கவிழ்ந்தது. அதிலிருந்து மியான்மர் ராணுவத்தினருக்கும், ஆயுத குழுவான அரக்கன் ஆர்மிக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. சமீபத்தில் மியான்மரில் விரைவில் தேர்தல் நடக்கும் என்று அறிவிப்பு வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் இன்று ஒரு தனியார் பள்ளியின் மீது அரக்கன் ஆர்மி பயங்கர வான்வெளி தாக்குதல் நடத்தியது. மேற்கு ராக்கைன் மாகாணத்தில் அரக்கன் ஆர்மி நடத்திய தாக்குதலில் 19 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அதன் பிறகு இந்த தாக்குதலில் 22 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதனை மிருகத்தனமான தாக்குதல் என ஐநா கண்டனம் தெரிவித்துள்ளது.
