மதுரை விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்.) நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை வலியுறுத்தினார்.

கட்சி ஒற்றுமையாக இல்லாவிட்டால், அது தி.மு.க.வுக்கு சாதகமாக அமைந்துவிடும் என எச்சரித்த அவர், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் எண்ணங்களை நிறைவேற்ற அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் எனக் கூறினார்.

கட்சியில் மீண்டும் இணைய எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை என்றும், அரசியலில் நண்பர்களோ, எதிரிகளோ இல்லை, எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

பா.ஜ.க. கூட்டணியில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக மாற்றப்பட வேண்டும் என்ற கருத்து நல்ல யோசனை எனக் குறிப்பிட்ட ஓ.பி.எஸ்., தர்மயுத்தம் தொடர்பாக 6 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஒன்றிணைப்புக்கு முன் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கூறிய அவர், செங்கோட்டையனின் ஒன்றிணைப்பு முயற்சி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

என்.டி.ஏ. கூட்டணி தொடர்பாக தனக்கு அழைப்பு வரவில்லை என்றும், மக்களைத் தொடர்ந்து சந்தித்து வருவதாகவும் அவர் கூறினார்.