அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஆர்பி உதயகுமாரின் தாயார் குறித்து வெளியிட்ட கருத்தால் ஏற்பட்ட சர்ச்சைக்கு மத்தியில், தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். ஆரம்பத்தில், “அவரது தாய் இறந்துவிட்டார்… முதலில் அதை பார்க்க சொல்லுங்கள்” என கூறியதாகக் கூறப்பட்ட நிலையில், ஆர்பி உதயகுமார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து, நிலைமையை உணர்ந்த செங்கோட்டையன், “என் பேச்சால் அவரது மனம் காயப்பட்டிருந்தால் வருந்துகிறேன்; அவருடைய தாயாருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன்” எனத் தெரிவித்தார். அவரது இந்த மன்னிப்பு, அதிமுகவில் ஏற்பட்ட ஒட்டுமொத்த சூழ்நிலையை அமைதிப்படுத்தும் வகையில் வரவேற்கப்படுகிறது.
