திருமாவளவன், தவெக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி மறுத்திருப்பது தொடர்பாக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
ஜனநாயக நாட்டில், அனைவருக்கும் கருத்து தெரிவிக்கும் உரிமையும், செயல் சுதந்திரமும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். அந்த அடிப்படையில், விஜய் மேற்கொள்ளும் பிரசார பயணத்திற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இது போன்ற தடைகள் மக்கள் நலனுக்கு எதிராக அமையும் என்றும் அவர் கூறினார்.
மேலும், காவல்துறை எந்த காரணத்திற்காக அனுமதி மறுத்தது அல்லது பயணத்தை தாமதப்படுத்தியது என்பது இன்னும் தனது கவனத்திற்கு வரவில்லை என்றும் திருமாவளவன் தெரிவித்தார். பொதுமக்கள் முன்னிலையில் பேசும் உரிமை, ஜனநாயகத்தின் அடிப்படைத் தளமாக இருப்பதனால், அதை தடுக்கக் கூடாது என்பதே தனது நிலைப்பாடு எனவும் அவர் விளக்கினார். இந்த விவகாரம் குறித்து முறையான விளக்கம் காவல்துறை தரப்பிலிருந்து வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
