நேபாளத்தில் சோசியல் மீடியாக்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் பெரும் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் 19 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து அங்கு சோசியல் மீடியாக்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்க பட்ட நிலையில் இயல்புநிலை திரும்பி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண் நேபாள் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள நிலையில் அவர் தங்கி இருந்த ஹோட்டலை தீ வைத்து எரித்ததாகவும் தன்னுடைய உடைமைகள் அனைத்தையும் இழந்து விட்டதாகவும் போராட்டக்காரர்கள் கம்பால் தங்களை விரட்டியதாகவும் கதறி அழுதபடி வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்தப் பெண் தன்னுடைய பெயர் உபாசனா கில் என்று கூறியுள்ள நிலையில் எத்தனை நாட்கள் நாங்கள் வேறொரு ஹோட்டலில் தங்க முடியும் என்னுடன் நிறைய பேர் இருக்கிறார்கள் எனவே இந்திய தூதரகம் எங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என வீடியோ வெளியிட்டு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
