சமூக ஊடகங்களை அதிரடியாக கவர்ந்துள்ள ஒரு வீடியோ தற்போது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதில், ஒரு வயதான நேபாள பெண் ராப் பாடுவதும், கையில் துப்பாக்கியுடன் ஸ்டைலாக நிற்பதும் காணப்படுவதால், பல நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சமூக வலைதளங்களில் “கோல்டி அம்மா” என அன்பாக அழைக்கப்படும் அந்தப் பெண், தடிமனான தங்கச் சங்கிலிகள், ஆடம்பரமான உடைகள் மற்றும் கையில் கலாஷ்னிகோவ் துப்பாக்கியுடன் ஸ்டூடியோவில் ராப் பாடும் வீடியோ வைரலாகியுள்ளது.
அவர் பாடிய ராப் வரிகளில், “நான் தினமும் அழுகிறேன், விளையாட நேரமில்லை… கடினமான வாழ்க்கைதான் – அதுதான் நேபாளி ஸ்டைல்” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.
இந்த ராப் வீடியோ வெளியாகிய சில நாட்களிலேயே, 44,000-க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 14,400-க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
https://www.instagram.com/reel/DMZcZiGu_rH/?igsh=aXN0ZWMzeTVjN2Ry
இவை அனைத்தும் உண்மையாகத் தெரிந்தபோதிலும், நிஜத்தில் இந்த “கோல்டி அம்மா” ஒரு உண்மை மனிதர் அல்லர் என்பது தான் திருப்புமுனை. அவர் ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட (virtual) கதாபாத்திரம் என்பதுதான் உண்மை.
இந்த தகவல் உறுதிப்படுத்தப்படுவதற்கான முன்முயற்சியாக, பல நெட்டிசன்கள் அவர் பகிர்ந்த பதிவுகளின் அடிப்படை விவரங்களை ஆய்வு செய்தனர். அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், இது ஒரு AI-யால் உருவாக்கப்பட்ட உருவம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் AI உலகம் எவ்வளவு வியக்கத்தக்க நிலைக்குத் தன்னை உயர்த்தியுள்ளது என்பதற்கே இந்த வீடியோ ஒரு சான்றாக அமைந்துள்ளது.
