நேபாள அரசின் சமீபத்திய நடவடிக்கையாக, சமூக வலைதளங்களின் பயன்பாட்டைத் தடைசெய்த தீர்மானம், அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் இந்த முடிவை முன்னறிவிப்பின்றி குடியுரிமை உரிமைகளை மீறும் செயல் எனக் கண்டித்து, பல்வேறு பகுதிகளில் போராட்டங்களில் ஈடுபட்டனர். இடையே, போராட்டங்கள் கலவரமாக மாறி, போலிஸாரும், பொதுமக்களும் மோதிக்கொண்டதால் தீவிரமான நிலை உருவானது.

“>

 

தற்போது வரை கிடைத்த தகவலின்படி, இந்த கலவரங்களில் 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சில இடங்களில் தகவல் தொழில்நுட்ப அலுவலகங்கள் மற்றும் ஊடக நிலையங்கள் தாக்கப்பட்டதாகவும், போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், துப்பாக்கிச்சூடும் நடத்தி அமைதியை கட்டுப்படுத்த முயன்றுவருகின்றனர்.

“>