பிரபல சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன். இவர் மீது தற்போது திருநங்கை ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திருநங்கை ஒருவர் நாஞ்சில் விஜயன் தன்னுடன் பழகி பாலியல் ரீதியாக உறவு கொண்டு துன்புறுத்து ஏமாற்றிவிட்டதாக கூறியுள்ளார்.

கடந்த ஐந்து வருடங்களாக தனக்கு நாஞ்சில் விஜயனை தெரியும் என்றும் தன்னுடன் நன்றாக பழகி உறவு கொண்டு விட்டு தற்போது தன்னை ஏமாற்ற முயற்சிக்கிறார் என்றும் கூறியுள்ளார். ஆனால் நடிகர் நாஞ்சில் விஜயன் அந்த திருநகையை யார் என்றே தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.