மத்தியப்பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில், பேராசை காரணமாக ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. தாயின் பாரம்பரிய நிலத்தை கைப்பற்றும் நோக்கத்தில், தந்தையை தனது மாமனுடன் இணைந்து வெட்டிக் கொன்ற மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொலைக்கான திட்டத்தை முன்கூட்டியே தீட்டியிருந்த இருவரில், மாமா அங்கித் என்பவர், “விலக்கான 20 நகங்களுள்ள ஆமை இருக்கின்றது” என்று கூறி, இளைஞரின் தந்தையை காட்டு பகுதியில் வரவழைத்துள்ளார். அங்கு வந்த பிறகு, அவருக்கு மது கொடுத்து மயக்கத்தில் ஆழ்த்தியுள்ளனர். அப்போது புதர்களில் மறைந்திருந்த மகன் கன்சுந்தர் வெளியே வந்து, இருவரும் சேர்ந்து கோடாலியால் தாக்கி கொலை செய்துள்ளனர்.

இந்த கொடூரக் காட்சிக்கு பின்னால், தாயின் நிலத்தை முழுமையாக கைப்பற்றும் நோக்கமே காரணம் என காவல்துறை தெரிவித்துள்ளது. கொலைக்குப்பின், உடலை காட்டுக்குள் புதைத்து விட்டனர். காவல்துறை இருவரையும் கைது செய்ததுடன், கோடாலி மற்றும் பயன்படுத்திய இரு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளது. இது தொடர்பான விசாரணையை கரேரா SDOP ஆயுஷ் ஜாகர் மற்றும் ஸ்டேஷன் இன்ச்பெக்டர் வினய் யாதவ் தலைமையில் தீவிரமாக நடந்து வருகிறது.