ஜார்க்கண்ட் மாநிலம் மலுமு மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதி குமாரி (24). இவர் திருமணம் ஆனவர். இந்நிலையில் ஹர்வா மாவட்டம் சிமர்டண்ட் கிராமத்தைச் சேர்ந்த சுமித் குமார் (26) என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக உருவானது. இந்த விவகாரம் ஜோதியின் கணவருக்கு தெரிந்ததும், இருவரையும் கண்டித்தும், கள்ள உறவு தொடரப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், சுமித் குமாருக்கு வேறு பெண்ணுடன் திருமண நிச்சயம் நடைபெற, ஜோதி மற்றும் சுமித்துக்கு இடையே முரண்பாடு அதிகரித்தது. இன்று காலை பன்பூர்வா கிராமத்தில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இருவரும் சந்தித்தனர். அங்கு கடுமையான வாக்குவாதம் உருவாக, சூழ்நிலை மோசமாகி, சுமித் தான் வைத்திருந்த கத்தியால் ஜோதியை குத்தினார். பலத்த காயங்களால் ஜோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து சுமித், தன்னுடைய துப்பாக்கியால் தன்னை சுட்டு தற்கொலை செய்துக் கொண்டார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த இரட்டைப் கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.