அதிமுக ஒன்றிணைய வேண்டும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் அவகாசம் வழங்கிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டார்.

எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட இந்த அறிவிப்பு, கட்சிக்குள் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது. செங்கோட்டையனின் நடவடிக்கைகள் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதாக கூறி இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நீக்க தீர்மானம் குறித்து செங்கோட்டையனிடம் கேட்கப்பட்டபோது, அவர் சுருக்கமாகவே பதிலளித்தார். “கழகத்தில் இருந்து நீக்கியதற்கு நான் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார். அவரின் இந்த பதில், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதிமுகவில் நீக்க நடவடிக்கைக்குப் பிறகும், செங்கோட்டையன் தனக்கான நிலைப்பாட்டில் உறுதியாகவே இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.