மத்தியப்பிரதேச மாநிலம் போபால் சந்திப்பு ரயில் நிலையத்தில், நபர் ஒருவர் தண்டவாளத்திற்கு அருகே பொருத்தப்பட்டிருக்கும் குழாய் மூலம், நகர்ந்து கொண்டிருக்கும் ரயிலை நோக்கி தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் எவ்வித அச்சமும் இன்றி நகரும் ரயிலின் மீது தண்ணீரைப் பாய்ச்சுவது தெளிவாகப் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் இணையவாசிகளிடையே பெரும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் கிளப்பியுள்ளது. பொது இடங்களில் மக்கள் நடந்து கொள்ளும் விதம் மற்றும் ரயில்வே பாதுகாப்பு குறித்து நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.

“>

மேலும், ரயில்வே வசதிகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைச் சுட்டிக்காட்டி, மிகவும் பரபரப்பாகக் காணப்படும் இந்த ரயில் சந்திப்பில் இதுபோன்ற செயல்கள் எப்படி அனுமதிக்கப்பட்டன என்றும், அந்த சமயத்தில் அதிகாரிகள் எங்குச் சென்றனர் என்றும் பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இருப்பினும், இச்சம்பவம் குறித்து ரயில்வே நிர்வாகம் தரப்பில் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும், நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை.