வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக அரசியலை கவரும் வகையில் பெருமை கூற்றை வெளியிட்டுள்ளார். “நான் 7 மாதங்களில் செய்ததை யாரும் செய்யவில்லை. வெறும் 7 மாதங்களில் 7 போர்களை நிறுத்தியுள்ளேன்” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். தன்னுடைய தலைமையில் உலக அமைதிக்காக பெரிய சாதனைகள் நிகழ்ந்துள்ளதாக அவர் வலியுறுத்தினார்.

அதே நேரத்தில், ரஷ்யா–உக்ரைன் போரை நிறுத்துவது தான் எதிர்பார்த்ததை விட கடினமாக இருப்பதாகவும் டிரம்ப் ஒப்புக்கொண்டுள்ளார். “இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவருவது சிக்கலான ஒன்றாக இருக்கிறது. இருந்தாலும், அதற்கான வழிகளை கண்டுபிடிக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறேன்” என்று அவர் கூறியுள்ளார். டிரம்பின் இந்தக் கருத்துகள், சர்வதேச அரங்கில் அமெரிக்காவின் பங்கு குறித்து புதிய விவாதங்களை எழுப்பியுள்ளன.