வாஷிங்டன்: அமெரிக்காவின்  ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றிய தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

“நான் எப்போதும் மோடியின் நண்பனாகவே இருப்பேன்… அவர் ஒரு சிறந்த பிரதமர். மிகவும் சிறந்தவர். ஆனால் இப்போதைய தருணத்தில் அவர் செய்து கொண்டிருப்பதை எனக்கு பிடிக்கவில்லை,” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ஒரு சிறப்பு உறவு உள்ளது. அதில் கவலைப்பட வேண்டிய எதுவும் இல்லை. சில நேரங்களில் மட்டுமே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். ஆனால் அந்த நட்பு உறவில் பெரிய சிக்கல் இல்லை” என கூறியுள்ளார். டிரம்பின் இந்த கருத்துகள், உலக அரசியல் வட்டாரத்தில் அமெரிக்கா–இந்தியா உறவை மீண்டும் முன்னிறுத்தும் வகையில் பார்க்கப்படுகின்றன.

“>