மிலாடி நபி பண்டிகையையும் (செப்.5), தொடர்ந்து வரும் வார இறுதி நாட்களையும் முன்னிட்டு, பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று திரும்ப வசதியாக இருக்க அரசு போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில், செப்டம்பர் 4 முதல் 7-ம் தேதி வரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து தமிழகம் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு வசதி உண்டு:
பொதுமக்கள் www.tnstc.in இணையதளம் மற்றும் TNSTC செயலி மூலமாக முன்பதிவு செய்து பயணத்தை திட்டமிட்டு பயணிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ஏற்பாடுகள் காரணமாக, முக்கிய நகரங்களில் மக்கள் கூட்டம் எதிர்பார்க்கப்படுவதால், போக்குவரத்து துறையினர் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
