தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்தவர் குரியகோஸ் ரங்கா. இவர் நடிகர் விசுவின் மைத்துனர் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் சுமங்கலி தான், மணல் கயிறு, நாலு பேருக்கு நன்றி, ஊருக்கு உபதேசம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமீப காலமாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது சிகிச்சை பலனின்றி மரணம் அடந்தார். மேலும் அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
