ஹாலிவுட் நடிகர் ட்வெய்ன் “தி ராக்” ஜான்சன் தனது புதிய தோற்றத்தால் வெனிஸ் திரைப்பட விழாவில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். செப்டம்பர் 1 அன்று நடந்த இந்த விழாவில், அவரது மாறுபட்ட தோற்றம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. “தி ஸ்மாஷிங் மெஷின்” என்ற அவரது புதிய திரைப்படத்தின் உலகளாவிய முதல் காட்சி இந்த விழாவில் நடைபெற்றது. இதனிடையே சமூக வலைதளங்களில் வெளியான அவரது புதிய தோற்றத்தின் வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் வியந்து பேசி வருகின்றனர்.
The Rock is currently going viral after losing a lot of muscle👀 pic.twitter.com/joGhS4GMo1
— kira 👾 (@kirawontmiss) September 1, 2025
இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் பலரும் தங்கள் கருத்துகளை எக்ஸ் தளத்தில் பகிர்ந்தனர். ஒருவர், “ராக் இப்போது கூழாங்கல் ஆகிவிட்டார்!” என்று கிண்டலாகக் கூறினார். மற்றொருவர், “இது AI-யால் உருவாக்கப்பட்டதா?” என்று வேடிக்கையாகக் கேட்டார். இன்னொரு ரசிகர். “தி ஸ்மாஷிங் மெஷின்” திரைப்படத்தில் ட்வெய்ன், எம்எம்ஏ போராளி மார்க் கெர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் 2002-ல் வெளியான ஒரு ஆவணப்படத்தால் ஈர்க்கப்பட்டு, மார்க் கெர்-ரின் வெற்றிகளையும் போதைப் பழக்கத்தால் அவர் எதிர்கொண்ட பிரச்சனைகளையும், அவரது காதலி டான் ஸ்டேபிள்ஸ் (எமிலி பிளன்ட்) உடனான உறவையும் சித்தரிக்கிறது. இப்படத்தை பென்னி சஃப்டி இயக்கியுள்ளார்.
