அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படும் மூத்த தலைவர் செங்கோட்டையன், வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி தன் முடிவை அறிவிப்பதாக இன்று (செப். 2) காலை அறிக்கை வெளியிட்டார்.

இதனையடுத்து, அவர் அதிமுகவில் இருந்து விலகலாம் என தகவல்கள் வெளியாகியதால், தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது. இதற்கிடையே, செங்கோட்டையன் இன்று ஈரோடு மாவட்டத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி, முக்கிய முடிவுகளைப் பற்றி விவாதித்துள்ளார்.

இந்நிலையில், செங்கோட்டையன் தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு இன்று மாலை பதிலளிப்பதாக  எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதனால், செங்கோட்டையன் விலகல் விவகாரம் குறித்து EPS எந்த முடிவை தெரிவிக்கிறார் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடையிலும், அரசியல் வட்டாரத்திலும் அதிகரித்துள்ளது. 5ம் தேதி செங்கோட்டையன் என்ன தெரிவிக்கிறார்? EPS என்ன பதில் அளிக்கிறார்? என்ற கேள்விகள் தற்போது அதிமுக ஆதரவாளர்களிடையே தலைநிமிர்கின்றன.