சென்னை நகரில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் சந்தித்து உரையாடினர்.

அப்போது, நண்பர்களுக்கிடையேயான கிண்டலுடன் , ஜெயக்குமார் நயினார் நாகேந்திரனின் கன்னத்தில் செல்லமாக தட்டிய காட்சி காணொளியாக பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, வைரலாகியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், அதிமுக-பாஜக கூட்டணியின் இணைபிறப்பான உறவை இந்தக் காட்சி உறுதி செய்கின்றது எனவும், இரு கட்சிகளின் நட்புறவு தொடரும் எனவும் அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

“>