அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கையிழந்துள்ளதாக கூறப்படும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சியிலிருந்து விலகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதைத் தொடர்ந்து, இன்று (செப்.2) ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் தனது ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தியதோடு, அதில் பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ பண்ணாரி பங்கேற்றிருந்தது அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சந்திப்பில் பங்கேற்ற பண்ணாரி எம்.எல்.ஏ, தனது எதிர்கால நிலைப்பாடு குறித்து வெளிப்படையாக எதுவும் கூறவில்லை என்றாலும், செங்கோட்டையன் எடுத்த முடிவுகளை அவர் ஆதரிக்கிறார் என பரப்பாக பேசப்படுகிறது. இதன் காரணமாக, பவானிசாகர் எம்.எல்.ஏவுக்கு கட்சியில் நிலவும் நிலைமை மற்றும் எதிர்கால அரசியல் பயணம் குறித்து கேள்விக்குறிகள் எழுந்துள்ளன. செங்கோட்டையன் தனது முடிவை செப்டம்பர் 5ஆம் தேதி அறிவிக்க உள்ளதாக கூறியுள்ள நிலையில், பண்ணாரி எம்.எல்.ஏவின் நிலைப்பாடும் அதே நாளில் தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.