உலகில் பல விலங்குகள், பறவைகள் தங்கள் தனித்துவமான நடத்தை மூலம் நம்மை ஆச்சரியப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் ஒரு வீடியோவில், ‘கோல்டன் ஈகிள்’ என்ற பறவை நீர்வீழ்ச்சியில் குளிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதுபோன்று ஒரு அசாதாரண காட்சியை இதற்கு முன் யாரும்  பார்த்திருக்கமாட்டார்கள்.

காடுகளை நன்கு அறிவோர், கோல்டன் ஈகிளை “வானத்தின் அரசன்” என்று அழைப்பது வழக்கம். அதிகபட்சம் மலை பகுதிகளில் வசிக்கும் இப்பறவைகள், மிகக் கூர்மையான பார்வையுடன் வானத்தில் பறந்தபடியே வேட்டையாடக்கூடியவை. ஆனால் இந்த வீடியோவில் காணப்படும் கோல்டன் ஈகிள், ஓர் அழகிய நீர்வீழ்ச்சிக்கீழ் குளிப்பதைக் காணலாம். அந்த நீர்வீழ்ச்சியின் கீழே சென்று முதலில் தண்ணீர் குடித்து, பின்னர் தனது இறக்கைகளை அசைத்து முழு உடலிலும் தண்ணீர் தெளிக்கிறது.

 

இந்த வீடியோவை @AMAZlNGNATURE என்ற X கணக்கு பகிர்ந்துள்ளது. இது இதுவரை மில்லியன் கணக்கில் பார்வைகளை பெற்றதுடன், பலரும் “முதல்முறையாக ஒரு ஈகிள் இப்படி குளிக்கக் காண்கிறேன்” எனக் கருத்து தெரிவித்துள்ளனர். மற்றொருவர் “இயற்கை உண்மையில் வியக்கத்தக்கது… இந்த வீடியோ அதற்கு  சான்று” என கூறியுள்ளார்.