அமெரிக்கா இந்தியா மீது 50% வரி விதித்ததையடுத்து, உத்தரப்பிரதேச மாநிலத்தின் பதோஹி பகுதியில் உள்ள கம்பளத் தொழில் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்தியாவின் கம்பள ஏற்றுமதி வர்த்தகம் ரூ.17,000 கோடி மதிப்புள்ளதுடன், அதில் 60% வரை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஆனால் புதிய வரிவிதிப்பு காரணமாக, அமெரிக்க சந்தையில் விற்பனை ஸ்தம்பித்துள்ளதால், பெரும்பாலான தொழிற்சாலைகள் உற்பத்தியை நிறுத்தி, தொழிலாளர்களை 60-70% வரை பணிநீக்கம் செய்துள்ளன. ஏற்கனவே பதோஹி பகுதிக்கு அதிகமான வேலைவாய்ப்பை வழங்கி வந்த இந்தத் துறையின் முடக்கம், உள்நாட்டு பொருளாதாரத்துக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கம்பள ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் இயக்குநர் அஸ்லம் மெஹ்பூப் கூறுகையில், “ஆகஸ்ட் 26 வரைவே காலக்கெடு இருந்தது. அதற்குப் பிறகு உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மூலப்பொருள் கொள்முதல், சாயமிடுதல் உள்ளிட்ட செயல்பாடுகள் அனைத்தும் கைவிடப்பட்டுள்ளன.
#WATCH | Bhadohi, UP | Carpet Export Promotion Council (CEPC) Director Aslam Mahboob says, “The effect is severe. We had a deadline till August 26… There is no new production. In the industry of Rs 17,000 crore, 60% of the business goes to America… Most of the goods are on… pic.twitter.com/h8ENddTuMJ
— ANI (@ANI) September 1, 2025
“>
உலகின் எந்த நாடும் அமெரிக்கா அளவுக்கு வர்த்தகத்தைக் கொடுக்க முடியாது என்பதால், இந்த நெருக்கடியில் இருந்து மீள எங்களால் உடனடியாக முடியாது. அரசு 50% வரியை ஏற்க வேண்டும். இல்லையெனில் இந்தத் துறையை காப்பாற்ற முடியாது” எனவே அவர் வலியுறுத்தினார்.
அகில இந்திய கம்பள உற்பத்தி செயலாளர் பியூஷ் பர்ன்வால் கூறுகையில், “ஜவுளி அமைச்சகத்தின் கீழ் தயாரிக்கப்படும் பொருட்களில், கம்பளங்கள் மட்டுமே பெரும்பாலான அளவில் 98-99% வரை ஏற்றுமதி செய்யப்படும். அதில் அதிகபட்சம் 60% அமெரிக்காவிற்கே செல்லும். இப்போது அமெரிக்கா 50% வரி விதித்திருப்பதால், அந்த சந்தை நமக்குத் தற்காலிகமாக முழுமையாக இழந்ததாகவே பார்க்கலாம்.
புதிய சந்தைகளை உருவாக்குவது நேரம் எடுத்துக்கொள்ளும். இதற்கிடையில், அரசு பிணை எடுப்பு தொகுப்பு அல்லது நிவாரண உதவிகளை வழங்க வேண்டியது அவசியமாக உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
