சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன தலைவர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீஃப் பங்கேற்றபோது, அவரின் ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. அதில், புடினிடம் பேச ஆசையுடன் காத்திருந்த ஷரீஃப்பை புடின் புறக்கணித்து சென்றதைக் காணலாம். வெறும் வணக்கம் தெரிவித்த புடின், உரையாடாமல் உடனடியாக நகர்ந்ததால், அந்த தருணம் ஷரீஃபுக்கு மிகப்பெரிய அவமானமாக அமைந்தது.
மேலும் ஒரே நிகழ்வில், ஸ்டேஜில் நாடுகளின் கொடிகள் வைக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு தலைவரும் தங்களது நாட்டுக்கே உரிய கொடியின் முன் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது வழக்கம். ஆனால், பாகிஸ்தான் பிரதமர் ஷரீஃப், தவறுதலாக உஸ்பெகிஸ்தான் நாட்டின் கொடியின் முன் நின்றுவிட்டார்.
पूरी दुनिया के सामने पाकिस्तान के पीएम शहबाज शरीफ का मज़ाक उड़ा
◆ पुतिन से मिलने पीछे-पीछे भागे शहबाज, लेकिन पुतिन ने किया नजर अंदाज, शहबाज की हुई बेइज्जती
◆ शी जिनपिंग पुतिन के साथ अन्य नेताओं का स्वागत करते नजर आए#ShehbazSharif | SCO 2025 | #VladimirPutin pic.twitter.com/HSVzw1vujE
— News24 (@news24tvchannel) September 1, 2025
“>
இதனை சமூக வலைதள பயனர்கள் விரைவில் கண்டுபிடித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். “இந்த அளவுக்கு நாட்டை திருப்திகரமாக வழிநடத்த முடியாதவர்கள் உலகமே எதிர்நோக்கும் மாநாட்டில் இந்த மாதிரியான தவறுகளை செய்வது ஏற்க முடியாதது” என நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. “ரஷ்யா யாருடன் உறவு வைக்க வேண்டும், யாரை புறக்கணிக்க வேண்டும் என்பது தெளிவாக இருக்கிறது. அதனால்தான் புடின், மோடியுடன் உரையாடிய பிறகு ஷரீஃபிடம் பேசாமல் சென்றார்” என நெட்டிசன்கள் பதிவு செய்துள்ளனர்.
மேலும், “இந்தியாவை விரும்பும் ரஷ்யா, பாகிஸ்தானை சுலபமாக எதிர்க்கும் என்பது தற்போது உண்மையாகவே நிரூபிக்கப்பட்டுவிட்டது” எனவும் கருத்துகள் பதிவாகி வருகின்றன.
