ஆசிரியர் பணியில் சேர, தொடர மற்றும் பதவி உயர்வு பெற TET தேர்ச்சி கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவு 5 ஆண்டுகளுக்கும் குறைவான பணிக்காலம் உள்ளவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் ஆசிரியர்கள், தங்களது பணியை தொடர்ந்து செய்ய அல்லது பதவி உயர்வு பெற விரும்பினால், கட்டாயமாக ஆசிரியர் தகுதித் தேர்வான TET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டுள்ளது.

குறிப்பாக, 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் TET தேர்வில் வெற்றி பெறாதவராக இருந்தால், அவர்களுக்கு வேலையை விட்டு வெளியேறவோ அல்லது இறுதி சலுகைகள் வழங்கப்பட்ட கட்டாய ஓய்விலோ செல்லவேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், ஏற்கனவே பணியில் உள்ள ஆயிரக்கணக்கான ஆசிரியர்களிடையே மிகுந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது.