ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து, மே 7 அன்று இந்தியா ஆபரேஷன் சிந்தூர் எனும் நடவடிக்கையை பாகிஸ்தான் மீது மேற்கொண்டது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து, மே 9 அன்று பேச்சுவார்த்தை மூலம் தற்காலிக தீர்வு எட்டப்பட்டது. ஆனால், இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ததை அடுத்து, இருநாடுகளின் உறவிலும் கடுமையான விரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், பாகிஸ்தான் வெளிநாட்டு அமைச்சர் இஷாக் தார் செய்தியாளர்களை சந்தித்து, “காஷ்மீர் பிரச்சினை உட்பட அனைத்து விவகாரங்களையும் இந்தியாவுடன் கண்ணியமான முறையில் விவாதிக்க பாகிஸ்தான் தயாராக உள்ளது” என தெரிவித்துள்ளார்.
