இன்ஸ்டாகிராமில் வெளியான காணொளியில், வானில் பறந்து வெடிக்கும் ஒரு பட்டாசு நிலத்தில் இருக்கிறது. அதை நோக்கி இளைஞர் ஒருவர் செல்கிறார். அவரைச் சுற்றி இருந்தவர்கள் “வேண்டாம், ஆபத்து” என்று தடுக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், இளைஞர் அவர்களைப் பொருட்படுத்தாமல், அந்த வெடியை எடுக்க முயல்கிறார்.

அந்த நேரத்தில், வெடி திடீரென வெடித்து, இளைஞரின் முகத்தைப் பதம் பார்த்துவிடுகிறது. இதனால் பயந்துபோன இளைஞர் உடனே பின்வாங்கி ஓடிவிடுகிறார். இந்தக் காணொளி, வைரலான நிலையில் ஆபத்தான சூழலில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.