பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில் கடுமையான வெள்ளப்பெருக்கு நிலவுகிறது. இதை முற்றிலும் நேரிலேயே மக்கள் முன்னிலையில் விவரிக்க பாகிஸ்தான் செய்தி நிறுவனம் அனுப்பியிருந்த செய்தியாளர்தான் மெஹருந்நிசா.

படகு (boat ) ஒன்றில் அமர்ந்து ரிப்போர்ட் செய்வதற்குள், திடீரென அச்சமும் பதட்டமும் காணப்பட்ட இவரது உணர்ச்சி மிக்க வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. படகில்  இருந்தபடியே “மிரண்டு போய்ட்டேன் , எனக்காக பிராத்தனை பண்ணுங்க” என்ற பேச்சும், “என் இதயம் யூ-யூ-nu இருக்கு” என பேசியதும் நெட்டிசன்கள் மனதை கவர்ந்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Niche Lifestyle (@nichelifestyle)

“>

அந்த வீடியோவில், மெஹருந்நிசா தனது பதட்டம் மற்றும் பயத்தை சற்றும் மறையாமல் பார்வையாளர்களிடம் பகிர்ந்துள்ளார். வெள்ளப் பெருக்கினால் ஏற்படும் ஆபத்துகளை நேரிலே காண நேரிடும் இந்த சூழலில், தன்னுடைய உணர்வுகளை மறைக்காமல் பகிர்ந்த இந்த ரிப்போர்ட், பாகிஸ்தானில் முன்னர் வைரலான செய்தியாளர் சந்த் நவாபின் வீடியோக்களை நினைவுபடுத்தி விட்டது.

“எனக்கு பயமாக இருக்கு, என் உயிர் உங்கள் கையில் தான் நண்பர்களே!” என அவர்  உருக்கமாக சொன்ன  வார்த்தைகள், வலைதளங்களில் பலரும் “புதிய மீம் குயின் இவர்தான்!” என பாராட்டுகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Brandsynario (@brandsynario)

“>

மெஹருந்நிசாவின் இந்த வீடியோ, முதலில் அவரின் செய்தி நிறுவன யூட்யூப் சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதன் பின்னர் பல சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பகிரப்பட்டு, தற்போதைக்கு 4.35 லட்சம் பார்வையாளர்களை தாண்டியுள்ளது.

இவ்வளவு நேர்மையான உணர்வுகளை கொண்ட பத்திரிகையாளர் குறித்த இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. பலரும், “இது தான் உண்மையான தருண ரிப்போர்ட்” என புகழ்ந்து வருகின்றனர்.