தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஆணவப் படுகொலை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் எனக் கோரி, தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தற்போதைய சட்டங்களால் இப்படிப்பட்ட கொலைகளை தடுப்பது கடினமான சூழ்நிலையில் உள்ளதால், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு தனிச்சட்டம் கொண்டு வர உத்தரவிடுமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.