தில்லி பச்சிம் விஹார் பகுதியில், தெருநாய்களுக்கு சோறு கொடுத்ததற்காக, ஒரு வழக்கறிஞர் முதிய தம்பதியை அடித்து காயப்படுத்திய அதிர்ச்சிக்கரமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோவில், நீல டீஷர்ட் அணிந்த அந்த வழக்கறிஞர், முதிய பெண் மீது விரோதத்துடன் தாக்குதல் நடத்தியதும், அவர்களது தலையில் ஏற்பட்ட காயங்களால் ரத்தம் கொட்டியதும் தெளிவாக காணப்படுகிறது. சம்பவம் நடந்த வீடியோவை ‘Telefauna’ என்ற நாய் காதலன் பகிர, பின்னர் நிகிதா யாதவ் என்ற மற்றொரு நாய் ஆர்வலர் முதிய பெண் ‘நிதி’-யின் வீடியோ சாட்சியத்தை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
A post shared by 𝐍𝐢𝐤𝐢𝐭𝐚𝐲𝐚𝐝𝐚𝐯 (@_nikitayadav_)
“>
அந்த வீடியோவில், “அந்த ஜெய்ராம் கார்க் என்கிற வக்கீல் எங்க குடியிருப்பில தான் இருக்கிறார். நாய்களுக்கு சோறு போட்டதுக்காக அடிக்கடி திட்டுவார். அந்த நாள் என் மார்பு மற்றும் பிரைவேட் பாகங்கள் வரை அடிச்சார். போலீஸ் ஸ்டேஷனில் நாங்க ஒரு மணி நேரத்துக்கும் மேலா நிக்குறோம், யாரும் எங்களோட பேசவே இல்லை. எங்கலேயே சமாதானமா விட்டுடு என சொல்றாங்க,” என நிதி வெறுத்த மனதுடன் கூறியுள்ளார். இதில் 4 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
View this post on Instagram
A post shared by Girija Lahoty | Teléfauna | Animal Communicator | Pet Psychic (@telefauna)
“>
இதேநேரத்தில், தெரு நாய்கள் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி புதிய உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, ஸ்டெரிலைஸ் செய்யப்பட்ட நாய்கள் வெளியே விடப்படலாம். ஆனால் ஆபத்தான நாய்கள் சிறப்பு முகாம்களில் வைக்கப்பட வேண்டும். பொது இடங்களில் நாய்களுக்கு சோறு கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நகராட்சிகள் ஒவ்வொரு வார்டிலும் உணவு இடங்களை அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது
