பீகார் மாநில காவல் தலைமையகம் பாகிஸ்தானில் சேர்ந்த பயங்கரவாதிகள் பீகாரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஜெய்ஸ்- இ-முகமது என்ற பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஹஸ்னைன் அலி, அடில் உசைன், முகமது உஸ்மான் ஆகிய 3 பேரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
அவர்கள் மூன்று பேரும் நேபாள நாட்டின் வழியாக பீஹாருக்குள் நுழைந்து நாடு முழுவதும் பெரிய அளவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. பூர்னியா, கதிஹார், அராரியா, கிஷன்கஞ்ச் என நேபாளம் மற்றும் வங்கதேச நாடுகளுடன் எல்லையை பகிரக்கூடிய மாவட்டங்களில் தற்போது தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மூன்று பேரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி காத்மாண்டோ நகருக்கு வந்து பின்னர் அராரியா கடந்த வாரம் வந்துள்ளனர். சம்பந்தப்பட்ட மூன்று பேரையும் பிடித்து கொடுக்கும் நபர்களுக்கு 50, 000 ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என காவல் தலைமையகம் அறிவித்துள்ளது.
