சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழ்நாட்டு முக்கிய கட்சிகள் மாற்றுக்கட்சியினரைக் கவரும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, சேலத்தில் நடைபெற்ற நிகழ்வில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், 1000-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர். இதில், அமமுக மாவட்ட விவசாய அணி செயலாளர் தங்கதுரை, வர்த்தக அணி நிர்வாகி சேட்டு, பாமக நிர்வாகிகள் சதீஷ்குமார், வேலன் மற்றும் திமுக நிர்வாகி வடிவேல் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அடங்குவர்.
தங்களை அதிமுகவில் இணைத்துக்கொண்டு, எதிர்வரும் தேர்தலில் கட்சியின் வெற்றிக்கு முழு ஒத்துழைப்பும் வழங்குவதாக உறுதியளித்துள்ளனர். இந்நிகழ்வின் மூலம், அதிமுக தனது கூட்டணியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஒரு முக்கியமான முன்னேற்றத்தை பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
