இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தக் காணொளியில் சிறுவர்களும் ஒரு சிறுமியும் வரிசையாக நின்று ஒரு விளையாட்டை விளையாடுகின்றனர். அவர்கள் ஒரு பலூனை ஊதி, அதை எத்தனை முறை காற்றடிக்க முடியும் என்பதை அடிப்படையாகக் கொண்டு விளையாடுகின்றனர்.

காணொளியில் முதலில் ஒரு சிறுவன் “20” என்று கூற, பலூன் 20 முறை காற்றடிக்கப்பட்டு வெடிக்காமல் தப்பிக்கிறது. இது பார்ப்பவர்களுக்கு பரபரப்பை ஏற்படுத்துகிறது. ஆனால், விளையாட்டு தொடர்ந்து செல்ல, மீண்டும் அந்த சிறுவனின் முறை வரும்போது, அவர் கூறிய எண்ணுக்கு ஏற்ப பலூன் ஊதப்பட்டு இறுதியில் வெடித்துவிடுகிறது.

அந்த சிறுவனிடமே தொடங்கி அந்த சிறுவனிடமே முடிந்ததால் இந்த காணொளி அதிகம் பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.