சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ ஒன்று, நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு துணிக்கடையில் முழு குடும்பமாக களமிறங்கிய பெண்கள் கூட்டாக திருடும் காட்சியே பதிவாகியுள்ளது.
கடைக்காரர் கவனமின்றி கண்ணாடி காட்சிப்பலகைக்கு சென்றிருக்கும் வேளையில், ஒரு பெண் ரேக்கில் இருந்த ஜீன்ஸை எடுத்து, அருகில் இருந்த பெண்ணிடம் ஒப்படைக்கிறார். அந்த பெண், மற்றொரு பெண்ணிடம் அந்த துணியை கொடுத்து, அவர்கள் ஒருவரது பையில் அதை அலட்சியம் இல்லாதபடி வைக்கின்றனர். இது வெறும் சில நொடிகளில் நடந்தாலும், சிசிடிவி-யில் தெளிவாக பதிவாகியுள்ளது.
இந்த 12 வினாடிகள் கொண்ட வீடியோ, சமூக ஊடக தளமான X இல் @The_Gandhian0 என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. “இவ்வளவு ஆபத்தான திருட்டு இதுவரை பார்த்ததில்லை… முழு குடும்பமே ஒரு திருடர்களானது” என்ற வாசகத்துடன் பதிவிடப்பட்ட இந்த காணொளி தற்போது 2.27 லட்சம் பார்வைகளைத் தாண்டியுள்ளது. வீடியோவை பார்த்த பலரும், “இது எந்த திரைப்படமும் இல்ல… வாழ்க்கையிலேயே நடந்த ஒரு திருட்டு!” எனக் கமெண்ட் செய்து வருகின்றனர்.
इतनी खतरनाक चोरी आप ने आज तक नहीं देखी होगी, यहां पे तो पूरी फैमिली ही चोर है…. pic.twitter.com/988NW1UpTI
— The Gandhian (@The_Gandhian0) August 26, 2025
“>
அதே நேரத்தில், நெட்டிசன்களின் எதிர்வினைகள் அதிகமாகப் பதிவாகி வருகின்றன. ஒருவர் நகைச்சுவையாக “இந்த குடும்பம் சம்பல் கொள்ளை பேரம்பு பாட்டியின் வாரிசுகள் போல இருக்காங்க” என பதிவிட்டுள்ளார். மற்றொருவர், “இப்போதெல்லாம் சிசிடிவி இருந்தும் பயப்படாம திருடுறாங்க… கடை உரிமையாளர்கள் இதை பார்த்து கற்றுக்கணும்” என வேதனையுடன் பதிவு செய்துள்ளார். தற்போது, சம்பவம் குறித்து போலீசாரும் விசாரணை நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
